தேசிய கல்விக்கொள்கையில் தனியார் பள்ளிகள் நிலைப்பாடு!

UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 04:12 PM

கோவை:
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின், கோவை மாவட்ட குழு கூட்டம், கோவை ஆவாரம்பாளையத்தில் நடந்தது.
சங்கத்தின் நிறுவன தலைவர் அரசகுமார் தலைமை வகித்தார். கோவை மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களிடம் அரசகுமார் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த தனியார் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் சங்கங்களை ஒருங்கிணைத்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில், அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. நான்கு வாரத்துக்குள், கருத்து தெரிவிக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரவை தொடர்ந்து, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கொடுக்கக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. தரம் வாய்ந்த மழலையர் துவக்கப் பள்ளிகளை தேர்வு செய்து, எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.
தனியார் பள்ளிகளுக்கென, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க குழு அமைக்க இருக்கிறார்கள். அந்த குழு, தமிழக அரசால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேசியக் கல்விக்கொள்கையில், தமிழக அரசின் நிலைப்பாடு தான், எங்கள் நிலைப்பாடும்.
மாநில துணைத் தலைவர் குப்புராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஆறுச்சாமி, மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.