Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தடையின்றி போன் பேச வருகிறது புதிய சேவை

தடையின்றி போன் பேச வருகிறது புதிய சேவை

தடையின்றி போன் பேச வருகிறது புதிய சேவை

தடையின்றி போன் பேச வருகிறது புதிய சேவை

UPDATED : ஜன 21, 2025 12:00 AMADDED : ஜன 21, 2025 09:59 AM


Google News
புதுடில்லி:
பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள் தங்கள் நிறுவன சேவை இல்லாத இடங்களில், இன்டர்நெட் மற்றும் குரல் அழைப்புகளுக்கு மற்ற நிறுவனங்களின், டவர்களை பயன்படுத்தும் சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது.

மொபைல் போன் இணைப்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கென பிரத்யேகமான டவர்களை வைத்துள்ளன. குறிப்பிட்ட இடத்தில் ஒரு நிறுவனத்தின் டவர் பலவீனமாக இருக்கும்போது, அழைப்புகளில் தடங்கல் ஏற்படுகிறது.

இந்த நிலைமையை சரிசெய்ய ஐ.சி.ஆர்., எனப்படும், இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் சேவையை தொலை தொடர்புத்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது. இதற்காக, டி.என்.பி., எனப்படும், டிஜிட்டல் பாரத் நிதி என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, 27,836 இடங்களில் புதிய மொபைல் போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த டவர்களில், பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் சேவையை பகிர்ந்து கொள்ள உள்ளன.

இந்த மூன்று சேவைகளில் ஒன்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், டவர் கிடைக்காத இடங்களில் இந்த மூன்றில் ஒரு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி 4ஜி மற்றும் குரல் அழைப்பு சேவைகளை தடையின்றி பயன்படுத்த முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us