சாதனை மாணவர்களுக்கு கிடைத்தது சைக்கிள் பரிசு

UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 10:47 AM
கோவை:
புஜங்கனுார், ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், கோடைகால திருவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
இதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, ரங்கோலி, காய்கறி கொண்டு வடிவமைத்தல், மருதாணியிடல், கேளிக்கை விளையாட்டுகள், முக ஒப்பனை செய்தல் என பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் நுாறு சதவீதம் வருகைப் புரிந்த மாணவர்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாக அதிகாரி நிர்மலா தேவி, கேடயம் வழங்கி கவுரவித்தார்.
கடந்த கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பல்துறைகளிலும் சிறந்து விளங்கிய சாதனை மாணவர்களுக்கு,தாளாளர் சோமசுந்தரம் சைக்கிள் பரிசளித்தார். முதல்வர் சர்லின் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.