மாநகராட்சி துவக்கப்பள்ளியில் பட்டமளிப்பு விழா கோலாகலம்

UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 09:12 AM
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு குழந்தை களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெற்றோரை ஈர்க்க, குழந்தைகளை மகிழ்விக்க, தனியார் பள்ளிகள் கே.ஜி., வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கே பட்டமளிப்பு விழா நடத்துகின்றன. தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், திருப்பூர் - பூலுவபட்டியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி, ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்தது. இந்த பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும், 175 பேருக்கு பட்டமளிப்பு விழாவுக்கு ஆடை அளவீடு செய்யப்பட்டது. பள்ளியில் மற்றும் பெற்றோர் உதவியுடன் ஆடைகள், தொப்பி தைக்கப்பட்டது. பட்டமளிப்பு விழா ஆடையணிந்த குழந்தைகளுடன் நேற்று காலை பட்டமளிப்பு விழா துவங்கியது.
மேடைக்கு ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் அழைத்து, ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்புக்கு சென்றதற்கு சான்றிதழ், 'கிராஜூவேஷன் டே' என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கினர். சான்றிதழில் குழந்தைகளை மகிழ்விக்க அவர்களது பெயருடன் துவக்கப் பள்ளியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின்மாலா தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் முஸ்ரக்பேகம் குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி, பாராட்டினர். ஆசிரியர் பயிற்றுனர் குமார் முன்னிலை வகித்தார்.
மாநகராட்சி பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தை கள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மேடையேறி, சான்றிதழ் வாங்கியதை நிகழ்வில் பங்கேற்ற பெற்றோர் மகிழ்ச்சியுடன் பார்த்து மகிழ்ந்தனர்.