தமிழில் ஆதார் கார்டு இருந்ததால் மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர்

UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 02:35 PM
பெங்களூரு:
ஆதார் கார்டு தமிழில் இருந்ததால், மாணவியை பஸ்சில் இருந்து இறக்கிய நடத்துனரின் செயல், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக அரசு, பெண்களுக்காக, சக்தி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கின்றனர். திட்டத்தை செயல்படுத்திய பின், இதுவரை கோடிக்கணக்கான பெண்கள் பயணித்தனர்.
பெண் ஊழியர்கள், தொழிலாளிகள், மாணவியருக்கு திட்டம் மிகவும் உதவியாக உள்ளது.
ஆனால் சில பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. பஸ்களில் இருக்கைக்காக, பெண்கள் முடியை பிடித்து அடித்து கொண்ட சம்பவங்கள், ஆங்காங்கே நடந்து உள்ளன. பஸ்களில் ஜன்னல் வழியாக குழந்தைகளை உள்ளே போட்டு, சீட் பிடித்த சம்பவங்களும் நடந்து உள்ளன. தங்களுக்கு பஸ்சில் இடம் கிடைப்பதில்லை என, ஆண்கள் புலம்புவதையும் கேட்க முடிகிறது.
பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க வேண்டுமானால், ஆதார் கார்டு காட்ட வேண்டும் என்பது விதிமுறை. இல்லாவிட்டால் இலவச பயணத்துக்கு அனுமதி கிடைக்காது. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்க வேண்டும்.
பெங்களூரின் லிங்கராஜபுரத்தில் வசிக்கும் 20 வயது மாணவி ஒருவர், செயின்ட் ஜோசப் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பி.காம்., படிக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன், சிவாஜிநகரில் இருந்து லிங்கராஜபுரத்துக்கு செல்ல பி.எம்.டி.சி., பஸ்சில் ஏறினார். வழியில் தன் ஆதார் கார்டை நடத்துனரிடம் காண்பித்தார்.
ஆனால், அவரது பெங்களூரின் முகவரி தமிழில் இருந்தது. கன்னடத்தில் இல்லை என கூறி, நடத்துனர் அதை ஏற்கவில்லை. ஆதார் கார்டு போலியானதாக இருக்கலாம் என, சந்தேகித்து மாணவியை பஸ்சில் இருந்து, கீழே இறக்கி விட்டார். அதன்பின் மாணவி வேறு பஸ்சில், டிக்கெட் வாங்கி பயணித்தார்.
நடத்துனரின் செயலை பலரும் கண்டித்தனர். மாணவியை பஸ்சில் இருந்து இறக்கி விட்டது சரியல்ல என, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.