மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தயார்!
மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தயார்!
மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தயார்!
UPDATED : ஜன 03, 2025 12:00 AM
ADDED : ஜன 03, 2025 09:16 AM

கோவை:
அரையாண்டு தேர்வு முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், 1,210 அரசுப் பள்ளிகள், 177 அரசு உதவிபெறும் பள்ளிகள், 665 தனியார் பள்ளிகள் என, 2,042 பள்ளிகள் உள்ளன. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிலும் நிலையில் கடந்த டிச., 9 முதல், 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, 24ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வரும், 6ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோரிடம் நிலவியது. ஆனால், நீட்டிப்பு செய்யப்படாத நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.
சித்தாபுதுார் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மட்டும், 189 மாணவியர் பயில்கின்றனர். இவர்களில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவியர், 60 பேருக்கு பாடப்புத்தகங்களும், ஆறு முதல், 9ம் வகுப்பு வரையிலான, 131 மாணவியருக்கு நோட்டுகளும் நேற்று வழங்கப்பட்டன.