வங்கதேசத்தில் வன்முறையால் பதற்றம்; இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை

UPDATED : ஜூலை 19, 2024 12:00 AM
ADDED : ஜூலை 19, 2024 10:23 AM
டாக்கா:
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்து பதற்றம் நிலவுவதால், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள், தங்கியுள்ள இடத்தைவிட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அந்நாட்டுக்கான இந்திய துாதரகம் எச்சரித்துள்ளது.
கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது.
இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆளும் அவாமி லீக் கட்சியினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக வெடித்து உள்ளது.
மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் நான்கு மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மூடப்பட்டன. மாணவர்கள், விடுதிகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.
இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். போலீசாரின் அராஜகத்தை கண்டித்து நாடு முழுதும் நேற்று பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதில், வங்கதேசத்தில் பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் பயணங்களை தவிர்க்கும்படியும், அவர்கள் தங்கியுள்ள இடத்தைவிட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது அவசரநிலை மற்றும் உதவிகள் தேவைப்பட்டால் இந்திய துாதரகம் மற்றும் துணை துாதரகங்களை அணுகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, போராட்டம் நடத்துவோருடன் பேச்சு நடத்த தயார் என வங்கதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.