Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞருக்கு தொழில்நுட்ப பயிற்சி; திருப்பூர் பயிற்சி நிலையத்துக்கு விருது

இளைஞருக்கு தொழில்நுட்ப பயிற்சி; திருப்பூர் பயிற்சி நிலையத்துக்கு விருது

இளைஞருக்கு தொழில்நுட்ப பயிற்சி; திருப்பூர் பயிற்சி நிலையத்துக்கு விருது

இளைஞருக்கு தொழில்நுட்ப பயிற்சி; திருப்பூர் பயிற்சி நிலையத்துக்கு விருது

UPDATED : மார் 27, 2024 12:00 AMADDED : மார் 27, 2024 10:39 AM


Google News
திருப்பூர்:
பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும், ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி நிலையத்துக்கு, 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.டாடா அறக்கட்டளையின், ரிவைவிங் கிரீன் ரெவல்யூஷன் செல்' என்ற இணை தொண்டு நிறுவனம் சார்பில், திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் நடக்கும், பணிகள் மற்றும் பயிற்சிகளை தணிக்கை செய்யவும், ஊக்குவிக்கவும், யு.பி.எஸ்., போரம்' என்ற அமைப்பு உள்ளது. அமைப்பின் திறன் மேம்பாட்டு பிரிவின் மூலமாக, சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது, திருப்பூர் பயிற்சி நிலையத்துக்கு கிடைத்துள்ளது.ரிவைவிங் கிரீன் ரெவல்யூஷன் செல்லின் செயல் இயக்குனர் பல்ஜிந்தர் சிங் மற்றும் திட்ட இயக்குனர் அருள்துரை ஆகியோர், மும்பையில் நடந்த விழாவில் விருதை பெற்றுள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி மையத்தினர் கூறியதாவது:
மத்திய, மாநில அரசு மானிய திட்டங்கள் வாயிலாக, இலவச பயிற்சி அளிக்கிறோம். திருப்பூர் பயிற்சி மையம், பொருளாதாரத்தில் நலிவடைந்த, 301 இளைஞர், இளம்பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. பயிற்சியை இலவசமாக அளிப்பதுடன், போக்குவரத்து செலவுக்கு, தலா, 4,500 ரூபாய் வழங்கி வருகிறோம். இந்நிலையில், திருப்பூர் தொழில்நுட்ப பயிற்சி மையத்துக்கு விருது கிடைத்துள்ளது, பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர் சேவைக்கான அங்கீகாரமாக கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us