Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இணைய இணைப்பிற்கு கட்டணம் செலுத்த ஆசிரியர்களுக்கு நெருக்கடி

இணைய இணைப்பிற்கு கட்டணம் செலுத்த ஆசிரியர்களுக்கு நெருக்கடி

இணைய இணைப்பிற்கு கட்டணம் செலுத்த ஆசிரியர்களுக்கு நெருக்கடி

இணைய இணைப்பிற்கு கட்டணம் செலுத்த ஆசிரியர்களுக்கு நெருக்கடி

UPDATED : ஏப் 19, 2024 12:00 AMADDED : ஏப் 19, 2024 11:08 AM


Google News
Latest Tamil News
பள்ளிக்கல்வித்துறை சார்பில் துவக்க,நடுநிலைப்பள்ளிகளில் ஹடெக் லேப் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

வரும் ஜூனில் பள்ளிகள் திறக்கும் முன்பே இதற்கான ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் அதற்கான இணைய வசதி ஏற்படுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். தனது முகவர்கள் மூலம் இணைப்பு கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் முகவர்கள் ஆசிரியர்களிடம் இணைப்பிற்கான பணத்தை கேட்டுள்ளனர். ஆசிரியர்கள் தரப்பில் சி.இ.ஓ., மற்றும் உதவி திட்ட அலுவலர் ஆகியோரை சந்தித்து இது குறித்து முறையிட்டனர். அவர்கள் இணைப்புக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்' என பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் திருப்புத்துார் ஒன்றியத்தில் பல முகவர்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் இணைப்புக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் கலக்கமடைந்த தலைமையாசிரியர்களுக்கு வட்டார அளவில் நெருக்கடி கொடுத்துள்ளனர். முகவர்கள் கேட்கும் தொகையில் பாதியாவது கொடுங்கள். இல்லாவிட்டால் நோட்டீஸ் தரப்படும்' என்றும் ஆசிரியர்களுக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

முகவர் ஒருவரிடம் கேட்கையில், நாங்கள் எந்த கட்டணமும் வசூலிக்காமல் இணைப்பு தருகிறோம்.

வெண்டர்களை நியமிப்பதில் கல்வித்துறையினர் குளறுபடி செய்துள்ளனர். பள்ளிப் பகுதியில் உள்ள வெண்டர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தால் செலவின்றி இந்த பணி முடிந்து விடும். வேறு புதிய வெண்டர்களிடம் கொடுப்பதால் ரூ.1500 செலவில் முடிய வேண்டிய இணைப்பு ரூ.10 ஆயிரத்தில் முடிகிறது.

மேலும் 2 கி.மீ.க்கு மேல் துாரமுள்ள பகுதிகளுக்கு 100 மீக்கு ரூ.10 வீதம் அரசே தருவதாக அறிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்களிடம் பணம் வாங்க வேண்டியதில்லை என்றார்.

வட்டாரக் கல்வி அலுவலரிடம் இது குறித்து பேசிய போது, பி.எஸ்.என்.எல்.வெண்டர்கள் பணம் கேட்கிறார்களா. மதுரை செல்கிறேன். பிறகு தகவல் சொல்கிறேன் என்றார். தேர்தல் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தற்போது இந்த இணைய இணைப்பிற்கான நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கின்றனர்.

இதனால் தேர்தல் பணிகள் சரிவர நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us