பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

UPDATED : பிப் 16, 2025 12:00 AM
ADDED : பிப் 16, 2025 10:18 AM

சென்னை:
தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்குவதால், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள், விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 3ம் தேதி; பிளஸ் 1 மாணவர்களுக்கு 5ம் தேதி; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 28ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. மொத்தம், 25 லட்சத்து, 57,354 மாணவர்கள், 3,316 மையங்களில், இந்த பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர்.
தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க, 13,798 பறக்கும் படை, தேர்வு மையங்களை கண்காணிக்க, ஒரு லட்சத்து, 26,108 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, தேர்வுகள் இயக்குநரகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துஉள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பொதுத்தேர்வுகள், பொதுத்தேர்தலை போல கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன. தேர்வுகள் முடியும் வரை ஆசிரியர் கள் மற்றும் அதிகாரிகள் விடுப்பு எடுக்க, பள்ளிக்கல்வி துறை தடை விதித்துள்ளது.
விடைத்தாள் சேமிப்பகங்களில், கண்காணிப்பு கேமராக் கள் பொருத்துவது, மின் தடை இல்லாமல் பராமரிப்பது, இரவு காவலர்கள், போலீஸ் பாதுகாப்பு அளிப்பது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் கவனச்சிதறல் ஏற்படாமல் பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.