Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் மகேஸ் பதில்

இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் மகேஸ் பதில்

இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் மகேஸ் பதில்

இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் மகேஸ் பதில்

UPDATED : மார் 12, 2025 12:00 AMADDED : மார் 12, 2025 05:25 PM


Google News
Latest Tamil News
சென்னை:
தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, அமைச்சர் மகேஸ் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:


உடைந்ததை ஒட்ட வைக்க வேண்டாம்,தேசிய கல்விக்கொள்கையின் மூலம் நன்றாக செயல்படும் தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம்.

தேசிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மொழி பிரச்னையை விமர்சிப்பது தவறாக வழி நடத்துவது என்பது மட்டுமல்ல. உண்மையான பிரச்னை என்ன என்பதையே தள்ளி வைப்பதாகிறது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் சோதனை முயற்சியை கடந்து பல ஆண்டுகளாக வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கல்விமுறை சிறப்பாக உள்ளது, தேசிய கல்விக் கொள்கை அதை சீர்குலைக்கிறது.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு பாடத்திட்டம் சிறந்த பலன்களை தருகிறது. தமிழகத்தின் கல்விமுறையானது சிறந்த தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது. மனப்பாடம் செய்வதற்கு பதிலாக கருத்து அடிப்படையிலான கற்றலில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். 1635 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர்.

இதன்மூலம் தமிழக மக்கள் என்ன விரும்புகின்றனர் என்பது தெளிவாகிறது. சிலர் கூறுவது போன்று, 3வது மொழியை கற்க வேண்டும் என்ற உண்மையான தேவை இருந்திருந்தால் நம் மக்கள் ஏன் மாநில வாரிய பள்ளிகளை தொடர்ந்து தேர்வு செய்கின்றனர். மக்களின் விருப்பங்களை புரிந்துகொண்டு நடப்போம். இரு மொழிக் கொள்கையையே தமிழகம் விரும்புகிறது.

ஆங்கிலம் ஏற்கனவே தமிழகத்தின் இருமொழி அமைப்பின் ஒரு பகுதி, மாணவர்கள் தங்கள் கலாசார அடையாளத்தைப் பேணுகையில் உலகளாவிய வாய்ப்புகள் இருப்பதை இங்குள்ள கல்விமுறை உறுதி செய்கிறது.

தமிழ் என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல ,அது நமது வேர்கள், வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு இணைப்பு. எனவே, தமிழகத்தில் எவ்வித மொழியையும் வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டாம்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது பெருமைக்கு தமிழும், உலக வழிகாட்டியாக ஆங்கிலமும் நமது முன்னேற்றத்திற்கும் சமத்துவத்திற்குமான பாதை.

எனவே, நமது மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, ​​தமிழகத்துக்கு கட்டாயமாக மூன்றாம் மொழி தேவையில்லை.

தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் சிறந்த கல்வி முறை மூலம் சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள் உருவாகி வருகின்றனர். பின்னர் ஏன் இந்த மாற்றத்தை கட்டாயப்படுத்த வேண்டும்?

தேசிய மொழிக்கொள்கையை விட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் மாற்ற வேண்டும்? இது மொழியை மட்டுமல்ல, கல்விமுறையை பாதுகாப்பது பற்றியது. தமிழகம் தனது மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் சமரசம் செய்யாது. தயவுசெய்து சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை சீர்குலைக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us