Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ தமிழ் துறைகள் அடுத்தடுத்து மூடலை தடுக்க வேண்டும்

தமிழ் துறைகள் அடுத்தடுத்து மூடலை தடுக்க வேண்டும்

தமிழ் துறைகள் அடுத்தடுத்து மூடலை தடுக்க வேண்டும்

தமிழ் துறைகள் அடுத்தடுத்து மூடலை தடுக்க வேண்டும்

UPDATED : மே 30, 2024 12:00 AMADDED : மே 30, 2024 10:29 AM


Google News
சென்னை:
வெளிமாநிலங்களில் அடுத்தடுத்து தமிழ்துறைகள் மூடப்படுவதை தடுக்க வேண்டும் என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பஞ்சாப், லக்னோ, அலாகாபாத், சண்டிகர் உட்பட பல்வேறு பல்கலைகளில், தமிழ்த்துறைகள் அடுத்தடுத்து மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைகளில், பேராசிரியர் காலிப் பணியிடங்கள் காரணமாக, தமிழ்த்துறைகள் மூடப்படுவது, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மொழியின் தொன்மை, பண்பாடு, நாகரிகத்தை உலகறிய செய்யவும், தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் வாழ்வியலையும், வெளிக்கொண்டு வரும் நோக்கில், அண்டை மாநில பல்கலைகளில் நிறுவப்பட்ட தமிழ்த்துறைகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்துவது அவசியம்.
எனவே, தமிழக அரசு நம் இனத்தின் அடையாளமான, தனித்துவமிக்க தமிழ் மொழியை பாதுகாக்கும் நோக்கில், அண்டை மாநிலப் பல்கலைகளில் செயல்படும், தமிழ்த்துறைகளுக்கு தேவையான பேராசிரியர்களை நியமித்து, அத்துறைகள் தடையின்றி செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை, உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us