UPDATED : ஜன 02, 2025 12:00 AM
ADDED : ஜன 02, 2025 11:12 AM
விருதுநகர்:
கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத் திங்கள் தமிழர் பண்பாட்டு மாதத்தையொட்டி தமிழரின் பெருமைகளை கூறும்வகையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு - பண்பாடும் பெருமிதங்களும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் பங்கேற்கும் வகையில் தனித்தனியே 3 பிரிவுகளில் ஓவிய போட்டிகள் ஜன. 4ல் நடக்கிறது.
இப்போட்டிகள் அருப்புக்கோட்டை அல் அமீன் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும்,.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரமும், 2ம் பரிசு ரூ.12 ஆயிரமும், 3ம் பரிசு ரூ.10 ஆயிரமும்,ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 10 ஓவியங்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும்பரிசாக வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களைக் கொண்டு தமிழர் பண்பாட்டு ஓவிய கண்காட்சி நடத்தப்படும்.எனவே மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி,மக்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 93616 13548, 86675 73086 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.