அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா; மேலாண்மை குழுவினர் எதிர்பார்ப்பு

UPDATED : நவ 22, 2024 12:00 AM
ADDED : நவ 22, 2024 12:36 PM

உடுமலை:
விடுமுறை நாட்களில், அரசுப்பள்ளிகளில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு, கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில், தற்போது பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, துாய்மையான கழிப்பறை, மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகிறது.
உடுமலை கோட்டத்தில் மட்டுமே, 300க்கும் அதிகமான அரசுப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகளின் பாதுகாப்பிற்கு, மிக குறைவான பள்ளிகளில் மட்டுமே, இரவுக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களின் சொந்த செலவிலும், முன்னாள் மாணவர்கள் வாயிலாகவும், இந்த வசதிகளை செய்துள்ளனர். மேலும், 90 சதவீத பள்ளிகளில் இரவுக்காவலர் என யாரும் இல்லை. இதனால் விடுமுறை நாட்களில், பள்ளிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலைதான் உள்ளது.
தற்போது அனைத்து பள்ளிகளிலும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய அரசுப்பள்ளிகளுக்கு, பாதுகாப்பு பல இடங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது.
குறிப்பாக, விடுமுறை நாட்களில் வெளிநபர்கள் பள்ளி வளாகத்தில் நுழைவது கட்டுப்பாடில்லாமல் உள்ளது.
வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைந்து விளையாடுவதும், அங்குள்ள குடிநீர் குழாய்கள், மேற்கூரை ஓடுகளை உடைப்பதும் தொடர்ந்து நடக்கிறது. கழிப்பறை, பள்ளி வளாகத்தையும் அசுத்தம் செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் புகார் அளித்த சில நாட்களுக்கு, இப்பிரச்னை இல்லாமல் இருக்கிறது. மீண்டும் சிறிது நாட்கள் கழித்து ஆரம்பமாகிறது. எனவே, பள்ளியின் பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசிய தேவையாக உள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம், கல்வித்துறை இணைந்து அரசு பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில், கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.