UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:46 AM

திருப்பூர்:
பள்ளிகளுக்கு நாளை (24ம் தேதி) கோடை விடுமுறை துவங்குகிறது. 40 நாட்கள் விடுமுறைக்கு பின், ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
பிளஸ் 2 மாணவருக்கு, மார்ச், 23ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கு, 25ம் தேதி, பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல், 8ம் தேதியுடன் பொதுத்தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புக்கு, கடந்த, 2ல் தேர்வு துவங்கியது.
மூன்று தேர்வுகள் நடந்த நிலையில், யுகாதி, ரம்ஜான் பண்டிகையால் விடுமுறை விடப்பட்டது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 13ம் தேதி முதல், 21ம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்பட்டது. நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அறிவியல் தேர்வு நடந்தது. இன்று (23 ம் தேதி) சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. நாளை (24ம் தேதி) முதல் கோடை விடுமுறை. விடுமுறை முடிந்து, 40 நாட்களுக்கு பின், ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது.
பள்ளி திறப்பு தள்ளி போகுமா?
ஜூன், 4ம் தேதி லோக்சபா தேர்தலின் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல் அல்லது அதற்கு அடுத்த நாளில் பள்ளிகள் திறக்கப்படும். ஜூன், 1 சனிக்கிழமை என்பதால், ஜூன், 3ல் பள்ளி திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வெயிலின் தாக்கம், அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தொடரும் நிலையில், ஓட்டு எண்ணிக்கையும் நடக்க உள்ளதால், பள்ளி திறப்பு ஜூன், 10ம் தேதிக்கு தள்ளி போகுமா அல்லது ஜூன், 3ல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து, இன்று மாலைக்கு அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.