UPDATED : மே 04, 2026 04:18 PM
ADDED : மே 04, 2026 04:19 PM
கோடை விடுமுறையில் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறீர்களா? மொபைல் போன், வீடியோ கேம்களில் மூழ்கிவிடாமல், மூளையை ஆக்டிவ் ஆக வைத்திருக்க, உடற்பயிற்சியுடன் சில கலைகள் கற்க தகுந்த தருணமிது. இதற்காக சில அமைப்புகள், சம்மர் கோச்சிங் கிளாஸ் நடத்துகின்றன.
நீச்சல் பயிற்சி
தண்ணீரில் விளையாட யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், நீச்சல் அறிந்தால் கடலுக்குள்ளே முத்தெடுக்கலாம். நீச்சல் கற்க விரும்பும் குழந்தைகளுக்கு, 'லேர்ன் டூ ஸ்விம் அகாடமி', நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள சவ்பரிங்கா பீடல் அபார்ட்மென்டில், காலை 06:30 - 08:30 மற்றும் மாலை 04:30 - 06:30 மணி வரை நான்கு பேட்ச்சாக பயிற்சி நடக்கிறது.
தொடர்புக்கு: 89739 21582; 90479 20687.
குத்துச்சண்டைக்கு தயாரா
பாக்சிங்கில் உங்கள் குழந்தையை சாம்பியனாக்க விருப்பமா… கே.சி.பி.சி., பாக்சிங் கிளப் சார்பில், ராஜீவ்காந்தி ரோட்டில் உள்ள சங்கனுாரில், இலவச கோடைக்கால பாக்சிங் பயிற்சி வகுப்பு வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கலந்து கொள்ளலாம். காலை 06:30 - 08:30 மற்றும் மாலை 04:30 - 06:30 வரை வகுப்பு இருக்கும்.
முன்பதிவுக்கு: 93667 57430.
களரி கற்கலாம்
பாரம்பரிய கலையான களரியை உங்கள் குழந்தை கற்க விரும்பினால், ராமநாதபுரத்தில் உள்ள ஆரிய வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள தன்வந்திரி கலாஷேத்ராவில் சேர்க்கலாம். வார இறுதி நாட்களில் சனிதோறும் காலை 06:30 - 08:00 மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 - 11:30 வரை நடக்கும். முன்பதிவு கட்டணம் ரூ.1,000. மாதாந்திர பயிற்சி கட்டணம் ரூ.500.
கூடுதல் தகவலுக்கு: 80726 45270.
சிலம்பம் சுற்றலாம்
கம்பு சுற்றுவதில் உங்கள் குட்டீஸ் மாஸ்டராக ஆசையா… மீள்கழனி சிலம்பம் அகாடமி சார்பில், ஆறு வயதுக்கு மேற்பட்டோருக்கு, வரும் 20ம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தெலுங்குபாளையத்தில் காலை 06:30 - 08:00; காந்திபார்க் மற்றும் பீளமேட்டில் மாலை 05:00 - 6:30 மணி வரை வகுப்பு நடக்கும். பயிற்சி கட்டணம் ரூ.1,000.
தொடர்புக்கு: 88833 85215.
கைவினை கலை
உழவன் ஸ்போர்ட்ஸ் சார்பில், 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, 15 நாட்களுக்கு, கைவினை கலை கற்று தர பயிற்சி அளிக்கப்படுகிறது. சிட்ரா ஏர்போர்ட் அருகே, கோவை திருநகர் பகுதியில் நடக்கும் இப்பயிற்சி வகுப்பு காலை 10:00 - 01:00 மணி வரை நடக்கிறது. பாட்டில் ஆர்ட், பொம்மை தயாரித்தல், சோப்பு தயாரித்தல் என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கைவினை பயிற்சி வழங்கப்படுகிறது. கட்டணம் ரூ.4,999.
தொடர்புக்கு: 94879 49493.
