வீட்டுக்கு மின் இணைப்பு கலெக்டரிடம் மாணவி மனு

UPDATED : மே 06, 2024 12:00 AM
ADDED : மே 06, 2024 09:24 AM
துாத்துக்குடி:
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணபேரி கிராமத்தை சேர்ந்தவர் தங்கசெல்வம். இவரது மனைவி சுப்புலெட்சுமி. இருவரும் கூலி வேலை செய்கின்றனர். இந்த தம்பதிக்கு பானுமதி என்ற மகளும், முத்து சங்கரலிங்கம் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு, அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இதுவரை பட்டா வழங்காததால், அவர்களுக்கு மின் இனைப்பு, குடிநீர், போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. மின் இணைப்பு இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கு மூலம் படித்த பானுமதி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.
இந்நிலையில், மாணவி பானுமதி தன் தாய் மற்றும் பாட்டியுடன் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதால், அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் அவர் மனுவை போட்டார்.
அந்த மனு விபரம்:
மின் இணைப்பு இல்லாததால், பத்து ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து, தேர்வு எழுதியுள்ளேன். தம்பி முத்து சங்கரலிங்கம் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறான்.
படிப்பு வசதிக்காக வீட்டுக்கு மின்சார இணைப்பு தாருங்கள். என் தம்பி கஷ்டப்பட்டு மண்ணெண்ணெய் விளக்கில் படிக்காமல் இருக்க, மின்சார வசதி ஏற்பாடு செய்து தாருங்கள்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.