மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் முடக்கம்
மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் முடக்கம்
மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் முடக்கம்
UPDATED : ஜூலை 19, 2024 12:00 AM
ADDED : ஜூலை 19, 2024 09:07 AM
நடுவீரப்பட்டு :
நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் அரசு பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் முடங்கியுள்ளது.
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு, சி.என்.பாளையத்தில் இரு அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் முற்றிலும் கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு விளையாட்டு ஆர்வம் இருந்தும், பள்ளியில் பல மாதங்களாக விளையாட்டு ஆசிரியர் இல்லாமல், அவர்களின் திறன் முடங்கி வருகிறது.
நடுவீரப்பட்டு பள்ளியில் விஸ்தாரமான விளையாட்டு திடல் இருந்தும் ஆசிரியர்இல்லாததால், விளையாட்டு வகுப்புகள் நடத்த முடியவில்லை. இதேபோன்று, கடலுார் மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.