UPDATED : ஆக 16, 2024 12:00 AM
ADDED : ஆக 16, 2024 08:13 AM
திருமங்கலம்:
திருமங்கலம் ராஜாஜி தெருவை சேர்ந்த ஹரி ஸ்ரீதரன் 17, திருமங்கலத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்தனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் தனது சிறுசேமிப்பு பணம் ரூ. 8 ஆயிரத்து 560 ஐ தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க ஹரிஸ்ரீதரன் முன்வந்தார். சுதந்திர தினமான நேற்று திருமங்கலம் தாசில்தார் மனேஷ்குமாரிடம் வழங்கினார். வருவாய் ஆய்வாளர் சந்திரலேகா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.