Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில நீச்சல் போட்டி

மாநில நீச்சல் போட்டி

மாநில நீச்சல் போட்டி

மாநில நீச்சல் போட்டி

மாநில நீச்சல் போட்டி

UPDATED : பிப் 24, 2026 11:17 AMADDED : பிப் 24, 2026 11:17 AM


Google News
Latest Tamil News
மதுரை:
திருநெல்வேலியில் தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம், திருநெல்வேலி நீச்சல் சங்கம் நடத்திய மாநில அளவிலான 19வது நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

குரூப் 1 பிரிவில் குருபிரசாத் 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 200 மீ., 400, 800 மீ., ப்ரீஸ்டைல் போட்டிகளில் வெண்கலம், 400 மீ., ஐ.எம்., போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இதே பிரிவு 200 மீ., ப்ரீஸ்டைல் போட்டியில் பூர்வஜா வெண்கலம் வென்றார்.

குரூப் 3 பிரிவில் இமயா 100 மீ., பட்டர்பிளை போட்டியில் தங்கம், 200 மீ., ஐ.எம்., போட்டியில் வெள்ளி, 50 மீ., 100மீ பேக் ஸ்ட்ரோக், 50 மீ., பட்டர்பிளை போட்டியில் வெண்கலம் வென்றார். குரூப் 4 பிரிவில் கேசவன் 50 மீ., 100 மீ., ப்ரீஸ்டைல், 100 மீ., பட்டர்பிளை போட்டிகளில் வெண்கலம் வென்றார்.

4 x 100 மிட்லே ரிலே, 4 x 200 ப்ரீஸ்டைல் ரிலே போட்டிகளில் ஸ்ரீ முத்து, தருண், ஷான் மதுரன், பிரகதீஷ், சரவணன் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.

மாநில நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், பயிற்சியாளர்கள் கோவிந்த் சக்கரவர்த்தி, அரவிந்த் பாராட்டினர்.