மாணவர்களுக்கு ஷூக்கள் வாங்க மாநில அரசு குறைந்த நிதி ஒதுக்கீடு

UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 10:52 PM
பெங்களூரு:
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ் வழங்கும் திட்டத்துக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய விலையையே, இம்முறையும் அரசு நிர்ணயித்துள்ளதால், நன்கொடையாளர்களிடம் பள்ளி மேம்பாடு மற்றும் பொறுப்பு கமிட்டிகள் கையேந்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இலவச ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படுகின்றன. பள்ளிகள் மேம்பாடு மற்றும் பொறுப்பு கமிட்டிகள், அரசின் நிதியுதவியில் மாணவ - மாணவியருக்கு ஷூக்கள், சாக்ஸ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
ஷூக்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. ஆனால் அரசு இதை மனதில் கொள்ளாமல், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நிர்ணயித்த தொகையையே இப்போதும் வழங்குகிறது.
இதனால் தரமான ஷூக்கள் வாங்க முடியாமல், கமிட்டிகள் திண்டாடுகின்றன. சந்தையில் தரமான ஒரு ஜோடி ஷூக்களின் விலை குறைந்தபட்சம் 450 முதல் 500 ரூபாய் விலை உள்ளது.
மாநில அரசு ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒரு ஜோடி ஷூக்கள், இரண்டு ஜோடி சாக்ஸ் வாங்க, மாணவருக்கு தலா 265 ரூபாயும்; ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 295 ரூபாயும்; ஒன்பதாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 323 ரூபாயும் நிர்ணயித்துள்ளது.
இந்த தொகையில், தரமான ஷூக்கள், சாக்ஸ் வாங்குவது கஷ்டம். நிதி பற்றாக்குறை ஏற்பட்டால், தனியார் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகளிடம் நன்கொடை பெற்று, தரமான ஷூக்கள் வாங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அனைத்து பள்ளிகளுக்கும் நன்கொடையாளர்கள், எங்கிருந்து கிடைப்பார்கள் என, பள்ளி மேம்பாடு கமிட்டிகள் கேள்வி எழுப்புகின்றன.
பள்ளி மேம்பாட்டு கமிட்டி அதிகாரிகள் கூறியதாவது:
குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளி என்றால், எப்படியோ சமாளிக்கலாம். ஆனால் அதிக மாணவர்கள் உள்ள பள்ளி என்றால், அதிகமான தொகை தேவைப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின், அரசு நிதி வழங்கியுள்ளது. இப்போது ஷூக்கள் வாங்க துவங்கினாலும், மாணவர்களுக்கு ஷூக்கள் வாங்க, மாதக்கணக்கில் தேவைப்படும்.
நன்கொடையாளர்களுக்கு காத்திருந்தால், ஷூக்கள், சாக்ஸ் வாங்க மேலும் தாமதம் ஆகும். இன்றைய விலைக்கு தகுந்தபடி, ஷூக்கள் வாங்க அரசு நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.