தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு

UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 10:08 AM

கோவை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினாத்தாள்கள் அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 19 ஆயிரத்து 614 மாணவர்கள், 20 ஆயிரத்து 126 மாணவியர் என, 39 ஆயிரத்து 740 பேர் எழுதினர். இதில், 17 ஆயிரத்து 938 மாணவர்கள், 19 ஆயிரத்து 422 மாணவியர் என, மொத்தம் 37 ஆயிரத்து 360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,380 பேர் தேர்ச்சி பெறவில்லை.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ல் முதல் துணைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறைந்தபட்ச கற்றல் கையேடுகள், வாராந்திர தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆகியவை அனுப்பும் பணி வேகமாக நடந்து வருகிறது.
கல்வி அதிகாரிகள் கூறுகையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக பெரும்பாலான அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தபட்ச கற்றல் கையேடு, வாராந்திர தேர்வு வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.
பயிற்சியில், மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் தேர்வு குறித்த மதிப்பெண் பட்டியல், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றனர்.