இல்லம்தேடி கல்வி திட்டத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 08:47 AM

உடுமலை:
இல்லம் தேடி கல்வி திட்டத்தில், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு நாட்களின்போது, மாணவர்களுக்கு அடிப்படை பள்ளிக்கல்வி தடைபடாமல் இருப்பதற்கு, இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, குழந்தைகளுக்கு வீடுதேடிச்சென்று பாடங்களை கற்பித்தனர். பள்ளிகள் முழுமையாக செயல்பட துவங்கிய பின்னரும், இத்திட்டம் செயல்பாட்டில் இருந்தது.
நடப்பாண்டில் இத்திட்டத்தின் தன்னார்வலர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இத்திட்டத்தில், முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பள்ளிநேரம் முடிந்த பின், இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர்.
பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, தன்னார்வலர்கள் வாயிலாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால், மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து திறன்களிலும் வளர்ச்சி இருப்பதாக ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.