மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: 102 மாணவ, மாணவியர் பங்கேற்பு

UPDATED : நவ 14, 2024 12:00 AM
ADDED : நவ 14, 2024 10:51 AM
நாமக்கல்:
மோகனுாரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 102 மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், 2024-25ம் ஆண்டிற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பயிலும், 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கு, சிறப்பு மருத்துவ முகாம், வரும், 26 வரை நடக்கிறது. அதன்படி, மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு முகாம் நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி, வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோ, வினோத்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதி முன்னிலை வகித்தார்.முகாமில், ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளியில் பயிலும், 102 பேர் பங்கேற்றனர். அவர்களில், 5 பேருக்கு, மருத்துவச்சான்று அடையாள அட்டை புதுப்பித்தல், 2 பேருக்கு, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, 8 பேருக்கு, ரயில் மற்றும் பஸ் பாஸ், 5 பேருக்கு, உதவி உபகரணங்கள் வழங்க பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜானகி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கினார். ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் ராதிகா, ஆசிரியர் பயிற்றுனர்கள் தமிழரசி, பிரேமலதா, சிறப்பு பயிற்றுனர்கள் ஆனந்தகுமார், மீனா, உமாதேவி, செல்வராணி இயன்முறை மருத்துவர் பாரதி உள்பட பலர் செய்திருந்தனர். நாளை, நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடையார்பாளையம், 15ல், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 18ல், பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு பஞ்., தொடக்கப்பள்ளி, 19ல், ப.வேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 21ல், கொல்லிமலை மாதிரி பள்ளி, 22ல், ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அண்ணா சாலை, 26ல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடக்கிறது.