Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய கல்விக்கொள்கை பற்றி சபாநாயகர் கூறியது தவறானது: கல்வியாளர்கள் அதிருப்தி

தேசிய கல்விக்கொள்கை பற்றி சபாநாயகர் கூறியது தவறானது: கல்வியாளர்கள் அதிருப்தி

தேசிய கல்விக்கொள்கை பற்றி சபாநாயகர் கூறியது தவறானது: கல்வியாளர்கள் அதிருப்தி

தேசிய கல்விக்கொள்கை பற்றி சபாநாயகர் கூறியது தவறானது: கல்வியாளர்கள் அதிருப்தி

UPDATED : செப் 02, 2024 12:00 AMADDED : செப் 02, 2024 05:51 PM


Google News
Latest Tamil News
கோவை:
தேசிய கல்விக் கொள்கை தமிழுக்கு எதிராக இல்லை. சபாநாயகர் அப்பாவு கூறியது முற்றிலும் தவறானது என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, சட்டசபை நாயகர் - கலைஞர் என்ற தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் கடந்த 30ம் தேதி, சென்னை மயிலாப்பூர் ரோசரி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழகம் கல்வியில், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. மோடி கொண்டு வந்ததால் ஏற்க மாட்டோம் என சொல்லவில்லை. ஆனால், 5ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால், உன் தந்தையார் தொழிலுக்கே செல்ல வேண்டும் என, மறைந்த ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை, மீண்டும் கொண்டு வருவதை ஸ்டாலின் எதிர்க்கிறார்.

நாட்டில், 10 கோடிக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். சமஸ்கிருதம் பேசுவோர், 25,000 பேர் இருப்பர். அந்த மொழியை கட்டாயம் படிக்க வேண்டுமென்பது நியாயமா. எனவே, முதல்வர் சமஸ்கிருதம் தேவை இல்லை என்கிறார். தமிழகத்தில் தற்போது இருக்கின்ற முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை, என்றார். சபாநாயகர் அப்பாவு கூறியது தவறானது என, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி: அவர் சொன்ன எதிலும் உண்மை இல்லை. புதிய கல்வி கொள்கையின் முக்கியத்துவத்தை, தரத்தை புரியாமல் பேசியுள்ளார். அதை அவர் சரியாக படிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கை தமிழுக்கு எதிராக இல்லை. தமிழ் வளர்ச்சிக்கோ, அதன் உயர்வுக்கோ எவ்வித தடையும் இருக்காது.

தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவதாக ஒரு மொழியை படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் போது, மாணவர்கள் பயனடைய வேண்டும் என்ற உள்நோக்கம் மட்டுமே அதில் உள்ளது. மாணவர்கள் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் மாணவர்கள் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது பயன்படும்.

தமிழக மாணவர்கள் முன்னேறக்கூடாது என, அவர்கள் பேசிக்கொண்டுள்ளனர். சபாநாயகருக்கு, தமிழக மாணவர்கள் மீது அக்கறையில்லை. தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தவில்லை எனில், தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும்.

கற்பகம் பல்கலை வேந்தர் ராமசாமி கூறியதாவது:


பிறமொழிகளை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. புதுச்சேரியில், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகள் கற்கும் மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். அதற்காகவே பிற மொழிகளை கற்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையின்றி அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது.

மாணவர்கள், 18 வயது முடித்தால் தான் பிளஸ் 2 முடிக்க முடியும் நிலை உள்ளது. தற்போது ஒரு மாணவன் பட்டம், முதுகலை, பி.எச்டி., பெற கூடுதலாக இரண்டு ஆண்டுகள் ஆகிறது. மறைமுகமாக இது வேலைவாய்ப்புக்கான காலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையே.

குழம்ப கூடாது


ஐரோப்பிய நாடுகளில், இளம் வயதில் ஆராய்ச்சி படிப்புகள் முடித்து வேலை பெற்று விடுகின்றனர்.ஆனால், இந்தியாவில், முதிர்ந்த வயதில், தான் வேலையை பெறுகின்றனர். கேரளாவில் கல்வி முறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் ஹிந்தியை திணிப்பதாக கூறி, மாணவர்களின் வாழ்க்கையை பாழாக்குகின்றனர். மாணவர்களுக்கு ஏற்றார் போல், கல்வி இருப்பது நல்லது. மும்மொழிக் கொள்கையை முறையாக புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது மொழி ஹிந்தி தான் எடுக்க வேண்டும் என, மத்திய அரசு கூறவில்லை. ஹிந்திக்கு பதிலாக பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளை தமிழக அரசு வழங்கலாம். தேவையில்லாமல் குழம்ப கூடாது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us