UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 05:41 PM

புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
ஒடிசா மாநில கடற்கரைப் பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து இன்று சூப்பர்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் டார்லிடோ எனப்படும் ஸ்மார்ட் அமைப்பின் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்த சூப்பர்சோனிக் ஏவுகணையின் இந்த சோதனை வெற்றியடைந்தது.
டார்லிடோ என்பது அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான இலகுரக குழல் வடிவ நீர்மூழ்கி குண்டாகும்; இதனை இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அடுத்த தலைமுறை ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.