சிலம்பம் சுற்றினால் ஆரோக்கியமாக உலகம் முழுவதும் சுற்றி வரலாம்!

UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM
ADDED : ஜூலை 15, 2024 09:40 AM

சிலம்ப கலை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என, பல சிலம்ப ஆசான்கள் போராடி வருகின்றனர். சவுரிபாளையத்தில் உள்ள சின்னசாமி, 50 கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிலம்பத்தை வளர்க்க, செயலாற்றி வருகிறார்.
தனது ஐந்து வயதில் இருந்து, சிலம்பம், பளு துாக்குதல், வலுதுாக்குதல் உள்ளிட்டவற்றை கற்றுவந்த இவர், மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில், 150க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்றுள்ளார்.
தான் கற்றுக்கொண்ட சிலம்பத்தை, பிறருக்கும் பயிற்றுவிக்க வேண்டும் என, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறார். மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல், போட்டிகளுக்கும் அழைத்து சென்று வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார்.
சிலம்பத்தை ஊக்குவிக்க, பல்வேறு சேவைகளை செய்து வரும் சின்னசாமி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். உலக சிலம்பம் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில், சிறப்பாக செயல்படும் பயிற்சியாளர்களுக்கு, சென்னை கவர்னர் மாளிகையில் விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த, 42 பேருக்கு தமிழக கவர்னர் ரவி விருது வழங்கினார்.விழாவில், கோவையை சேர்ந்த சின்னசாமிக்கு, சிலம்பம் செம்மல் விருது வழங்கப்பட்டது.
சிலம்ப பயிற்சியாளர் சின்னசாமி கூறுகையில், சிலம்பம் சுற்றுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சிலம்பம் பயிற்சி செய்து வந்தால் நீண்ட நாட்கள், உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உலகம் முழுவதும் பயமின்றி சுற்றி வரலாம். இப்படி, சிலம்பம் பற்றி நிறைய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; நிறைய வீரர்களை உருவாக்க வேண்டும். அரசு தரப்பில் சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் அளித்து, தனி இடஒதுக்கீடு வழங்கினால், பல இளைஞர்கள் சிலம்பம் கற்றுக்கொள்ள முன்வருவார்கள்.