பின்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 மாணவர்கள் காயம்

UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 11:48 AM
ஹெல்சின்ஹி:
பின்லாந்து நாட்டில் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
வந்தா என்ற நகரில் உள்ள பள்ளி ஒன்றில் காலை 9 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஹெல்சின்ஹி நகரில் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
இவரும், காயமடைந்த மாணவர்களும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.