மழைநீரால் குளமான அரசு பள்ளி வளாகம் அகற்றாமல் வகுப்பு துவங்கியதால் அதிர்ச்சி

UPDATED : டிச 05, 2024 12:00 AM
ADDED : டிச 05, 2024 10:08 AM
திருவொற்றியூர்:
அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில குளம் போல தேங்கிய மழைநீரை அகற்றாமல் வகுப்புகள் துவங்கப்பட்டதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவொற்றியூர், அஞ்சுகம் நகர் அருகே செயல்படும், ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில், 2,000 க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். புயல், மழையால் பள்ளி வளாகம் மழைநீர் சூழ்ந்து குளமாக காட்சியளிக்கிறது.
விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. தேங்கிய மழைநீர் அகற்றப்படாமல் வகுப்புகள் துவங்கின. இதனால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சியடைந்து, பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.
தகவலறிந்த, 5 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை அழைத்து, மின் மோட்டர் வாயிலாக, நீரை உறிஞ்சி வடிகாலுக்கு கடத்தும் பணியை மேற்கொண்டார்.
பஸ் நிலையம்
திருவொற்றியூர் தற்காலிக பேருந்து நிலைய வளாகத்திலும், மழைநீர் தேங்கியதால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையோரம், பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓட்டுனர் - நடத்துனர்கள் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
அதனருகே, ரீட் கூட்டுறவிற்கு சொந்தமான நிலத்தில், அரசு கல்லுாரிக்கு நிரந்த கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. சாலை மட்டத்தை காட்டிலும், அந்த இடம் தாழ்வாக உள்ளதால், முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டுமான பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் அங்கேயே தங்கியிருப்பதால், அவர்கள் அவதிகுள்ளாகியுள்ளனர்.