Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐஐடி-ல் சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழா

சென்னை ஐஐடி-ல் சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழா

சென்னை ஐஐடி-ல் சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழா

சென்னை ஐஐடி-ல் சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழா

UPDATED : டிச 31, 2024 12:00 AMADDED : டிச 31, 2024 11:46 AM


Google News
Latest Tamil News
சென்னை:
மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழாவின் 26ம் ஆண்டு நிகழ்வை ஜனவரி 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை சென்னை ஐஐடியில் நடக்கிறது.

முற்றிலும் மாணவர்கள் மட்டுமே நிர்வகிக்கும் இந்நிகழ்வில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இத்திருவிழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. அடுத்தடுத்து 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்துநாட்களில்70,000 பேர்இவற்றைப்பார்வையிடவருவார்கள்எனஎதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் வாயிலாக இந்த அறிவியல்- தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது.

இது குறித்து ஐஐடி சென்னை இயக்குநர் மற்றும் பேராசிரியர் காமகோடி கூறுகையில், இவ்வாறான நிகழ்வுகள் மூலம் மாணவர்களிடையே நிர்வாகத்திறன், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, பொது நோக்கத்திற்காக பெரியகுழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன்கள் வளர்கிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெருநிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள், தொழில்முனைவோர், முக்கிய பிரமுகர்களையும் ஆகியோரை எல்லோரையும் எவ்வாறு தொடர்பு கொள்வது,அவர்களை எப்படிக் கையாள்வது என்பதை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது, என்றார்.

ஐஐடி சென்னை டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயணன் என் கும்மாடி கூறுகையில், இந்த ஆண்டுக்கான சாஸ்த்ரா மாநாடு மற்றும் ஆராய்ச்சி மாநாட்டில் எதிர்கால நகரங்கள் மற்றும் ஸ்மார்ட்உற்பத்தி என்ற தலைப்பில் இரு புதிய பகுதிகளை அறிமுகப்படுத்துகிறோம், என்றார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us