கல்லுாரி மாணவர்களை தாக்கிய ஏழு பேர் கைது

UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 10:09 AM
எலஹங்கா:
எலஹங்காவில் வாடகைக்கு வீடு தேடி கொண்டிருந்த இரு கல்லுாரி மாணவர்களை தாக்கிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக பெங்களூரு வடகிழக்கு டி.சி.பி., லட்சுமி பிரசாத் நேற்று அளித்த பேட்டி:
ராஜனகுன்டேயில் உள்ள தனியார் கல்லுாரியில் கிருஷ்ணா பாஜ்பாய், யுவராஜ் சிங் ஆகியோர் படித்து வருகின்றனர். 15 நாட்களுக்கு முன்பு, எலஹங்கா நியூடவுன் அருகில் தங்குவதற்கு வீடு தேடி வந்தனர்.
அப்போது அவர்களை வழிமறித்த ஏழு பேர், இருவரையும் தாக்கி, சிகரெட்டால் சூடுவைத்துள்ளனர். இதை வீடியோ எடுத்து, வீட்டுக்கு முன்பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த 50,000 ரூபாயை பறித்துக் கொண்டனர். இது தொடர்பாக எலஹங்கா நியூடவுன் போலீசில் இருவரும் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், விவேக், அனமித்ரா, யுவராஜ் ராத்தோர், அர்ஜீரோஜீத், பிரஜீத், ஆலன், கரன் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.