Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நிறுவனங்களின் தேர்வு முறைகள்!

நிறுவனங்களின் தேர்வு முறைகள்!

நிறுவனங்களின் தேர்வு முறைகள்!

நிறுவனங்களின் தேர்வு முறைகள்!

UPDATED : ஏப் 14, 2024 12:00 AMADDED : ஏப் 14, 2024 06:56 PM


Google News
Latest Tamil News
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அங்கு பணிபுரியும் பணியாளர்களின் வேலைத் திறனிலேயே உள்ளது. இதனை உணர்ந்தே, பணியாளர்களை பணியமர்த்துவதில் ஒவ்வொரு நிறுவனமும் அதீத கவனம் செலுத்துகின்றன.

பொதுவாக, தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை எவ்வாறு தேர்வு செய்கின்றன, அவற்றின் பிரதான எதிர்பார்ப்புகள் என்ன என்பதை இங்கே காணலாம்.

வேலை விபரம்


பெரும்பாலான நிறுவனங்கள், என்னென்ன பணிகளுக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை விரிவாக குறிப்பிட்டே அறிவிப்பை வெளியிடுகின்றன. பணிகள் குறித்த விபரம், எதிர்பார்க்கப்படும் கல்வித் தகுதி, பொறுப்புகள், சம்பளம் மற்றும் இதர சலுகைகளை தெளிவாக குறிப்பிடுகின்றன. அத்தகைய குறிப்பிடப்பட்ட தகுதிகளை பெற்றுள்ளோமா என்பதை விண்ணப்பிக்கும் முன் சுய ஆய்வு செய்துகொள்வது நல்லது.

ஆய்வு


பணிகளுக்கு சரியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன், விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட விபரங்கள், பணி அனுபவம், கூடுதல் திறன், பணி விபரங்கள் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப பட்டியலிடப்படுகின்றனர். குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதும் பல்வேறு வழிகளில் ஆராயப்படுகின்றன.

மேம்பட்ட தொழில்நுட்பம்


பணியமர்த்தல் மேலாளரின் பணியை தற்போது தொழில்நுட்பம் செய்கிறது. சில நிறுவனங்கள் இவ்வகையான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உதவியுடன் ஆட்சேர்ப்பு பணியை மேற்கொள்கின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் முழு தேர்வு செயல்முறையும் தானியங்கி முறையில் நடைபெறுகிறது. சாட்போட்கள் தொழில்நுட்பத்தின் மூலம் விண்ணப்பதாரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்கிறது.
இதன்மூலம் ஒரு விண்ணப்பதாரரின் செயல்திறனை மென்பொருளே மதிப்பீடு செய்கின்றன. இவ்வாறு மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் வாயிலாகவும் சிறந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவதால், அதற்கு ஏற்ப தயாராவதில் கவனம் செலுத்த வேண்டியதும் காலத்தின் தேவை.
சமூக ஊடகங்கள்


சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சரியான வேட்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் முன்கூட்டியே தொடர்பு கொள்ளப்படுகிறது. லிங்க்ட்இன், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் பிற சமூக தளங்கள் விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த ஆளுமை மற்றும் அவர்கள் நிறுவனத்தின் சட்ட விதிமுறைகளுக்கு எந்தளவுக்கு பொருந்துவார்கள் என்பதைப் பற்றிய அறிவை வழங்குகின்றன.
திறமையான பணியாளர்களை கண்டறிந்து இணைக்க, சமூக ஊடகம் சிறந்த வழியாக இருக்கிறது. அதேநேரம், சமூக ஊடங்களில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ளும் நபர்கள் நல்ல வேலை வாய்ப்பை இழக்கும் நிகழ்வும் உண்டு. ஆகவே, பொறுப்புடன் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அவசியம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us