முழுவீச்சில் பள்ளி சீருடை தயாரிப்பு பணி
முழுவீச்சில் பள்ளி சீருடை தயாரிப்பு பணி
முழுவீச்சில் பள்ளி சீருடை தயாரிப்பு பணி
UPDATED : ஜூன் 04, 2024 12:00 AM
ADDED : ஜூன் 04, 2024 11:14 AM

உடுமலை:
கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், சீருடை தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து, வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, புத்தாடை தைக்கும் ஆர்டர்கள், தையல் நிலையங்களுக்கு கிடைக்கிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் உள்ளனர். அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு; ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு; 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, மூன்று வகை வண்ணங்களில், சீருடைகள் வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளில், பள்ளி நிர்வாகமே, மொத்தமாக கொள்முதல் செய்து, தலா இரண்டு செட் சீருடையை தைத்தும் கொடுக்கின்றன. தனியார் பள்ளிகளின் சீருடைக்கான துணிகள், முன்னணி ஜவுளிக்கடைகளில் கிடைக்கிறது.
உடுமலை பகுதிகளில் ஒவ்வொரு கடைகளிலும், சீருடை துணி மற்றும் ஆடை விற்பனை, பெல்ட், ஷூ மற்றும் ஷாக்ஸ் விற்பனை களைகட்டியிருக்கிறது. 'ஸ்டேஷனரி கடைகளில், நோட்டு, புத்தகம், பென்சில் பாக்ஸ், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
ஆண்டு விற்பனை என்ற வகையில், ஸ்கூல் பேக் மற்றும் 'லஞ்ச்' பேக் விற்பனை, ரோட்டோர கடைகளில் துவங்கி, 'பிராண்டட்' கடை வரை, கூட்டம் களைகட்டியிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவியருக்கான சீருடை, காலணிகள், பெல்ட், ஸ்கூல் பேக், 'லஞ்ச்' பேக் விற்பனை, ஒவ்வொரு ஆண்டும் களைகட்டிக்கொண்டிருக்கும். மேல்நிலை பள்ளி படிப்பை முடித்து, உயர்கல்விக்கு பலரும் செல்கின்றனர்.
அதேபோல், ஆரம்ப கல்வியில் பல்லாயிரக்கணக்கானோர் காலடி எடுத்து வைக்கின்றனர். சிலர், உயர்கல்விக்கு உயர்கின்றனர்; சிலர் மேல்நிலை கல்விக்கு மாறுகின்றனர். ஒவ்வொரு கட்டமாக மாறும் போது, சீருடை, காலணி என, மிடுக்காக பள்ளிக்கு சென்று வருவதையே பெற்றோரும் விரும்புகின்றனர்.
அந்த வகையில், ஜூன் மாதம் பிறந்த பிறகு, உடுமலையில் இயங்கும் ஜவுளிக்கடைகள் பரபரப்பாக மாறிவிட்டன.