ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளுக்கு தலா 12 ரூபாய் தானா?

UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 04:04 PM
போபால்:
மத்திய பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தலா ரூ.12 வீதம் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 1.36 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 30ம் தேதி நிலவரப்படி, 29,830 குழந்தைகளுக்கு அதிக பாதிப்பும், 1,06,422 குழந்தைகளுக்கு மிதமான பாதிப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தலா ரூ.12 வீதம் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது மத்திய பிரதேச அரசுக்கு எதிராக கேள்விகளை எழச் செய்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே, ஊட்டச்சத்து பொருட்களை விநியோகம் செய்வதில் முறைகேடு நடப்பது வெளிச்சத்திற்கு வந்த பிறகும், இன்னும் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், குழந்தைகளின் இந்த பாதிப்புகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் மத்திய அரசின் ஊட்டச்சத்து குறித்த அறிக்கையின்படி, மத்திய பிரதேசத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளில் 40 சதவீதம் பேர் குறைவான எடையுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மையங்களில் தினமும் ஒரு குழந்தைக்கு ரூ.8 ஒதுக்கப்படுகிறது.
இதன்மூலம், ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 12 முதல் 15 கிராம் புரோட்டினும், 500 கலோரி கொண்ட உணவு மட்டுமே கிடைப்பதாக சொல்லப்படுகிறது. ஊட்டச்சத்து அதிக குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ரூ.12 ஒதுக்கப்படுவதால், 20 முதல் 25 கிராம் புரோட்டினும், 800 கலோரிக்கான உணவுகளே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைவான தொகையின் மூலம் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை எவ்வாறு போக்க முடியும்? என்று சமூக ஆர்வலர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு தண்ணீர் பாட்டில் ரூ.10க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.33க்கும் பிற அத்தியாவசியப் பொருட்களில் விலையும் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்த குறைவான தொகையை ஒதுக்குவதன் மூலம், குழந்தைகளுக்கு எப்படி சத்தான உணவுகளை கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு குழந்தைகளில் வயதைப் பொறுத்து, குறைந்தபட்சம் ஒரு குழந்தைக்கு தலா ரூ.40 முதல் ரூ.50 ஒதுக்கினால் மட்டுமே சத்தான உணவுகளை முழுமையாக கொடுக்க முடியும். மத்திய பிரதேசம் ஒதுக்கும் நிதி போதாது, என்று ஊட்டச்சத்து நிபுணர் சம்ரா ஹிசைன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் நிர்லமா பூரியா கூறுகையில், மத்திய அரசின் முடிவின்படியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியை அதிகரிக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். நமது எதிர்காலமான குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்னையில் உரிய கவனம் செலுத்தப்படும், எனக் கூறினார்.
2047க்குள் ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகளை உருவாக்குவதை இலக்காக கொண்டு செயல்படும் மத்திய பிரதேச அரசின் இந்த செயல்பாடுகள், அதனை சாத்தியமாக்குமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.