விடைத்தாள் இல்லாததால் ரிவிஷன் தேர்வு ரத்து; கலெக்டரிடம் புகார் தெரிவித்த பெற்றோர்

UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:11 AM
ஊட்டி:
ஊட்டியில், கலெக்டர் தலைவராக உள்ள, பிரீக்ஸ் பள்ளியில் விடைத்தாள் இல்லாததால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிவிஷன் தேர்வு ரத்து செய்யப்பட்டது என பெற்றோர் குற்றம் சாட்டினர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 1874-ம் ஆண்டு ஆங்கிலேயரால், பிரீக்ஸ் பள்ளி துவக்கப்பட்டது. சமீபத்தில் இந்த பள்ளியில், 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் இந்த பள்ளி, நீலகிரி மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு நிர்வாக குழுவினரால் செயல்படுகிறது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு விரைவில் பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், ரிவிஷன் தேர்வு நடக்க இருந்தது. ஆனால், மாணவர்கள் எழுதுவதற்கான விடை தாள்கள் இல்லை என தெரிவித்து ரிவிஷன் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காக கலெக்டர் லட்சுமி பவ்யா இந்த பள்ளிக்கு வந்தார். அப்போது, கலெக்டரிடம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரகுபதி மற்றும் சிலர் இது குறித்து கூறினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் லட்சுமிபவ்யா கூறுகையில், இந்த சம்பவம் குறித்து எனக்கு இதுவரை தெரியாது; விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.