கல்லுாரி பருவத்தேர்வு மறுமதிப்பீடு; மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 04:31 PM
கோவை:
கோவை அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லுாரியில், 2024 ஏப்ரலில் நடந்த பருவத் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை கல்லுாரி இணையதளமான www.gacbe.ac.in ல் அறிந்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர் கல்லூரி வளாகத்தில் உள்ள யூகோ வங்கியில் உரிய கட்டணத்தை செலுத்தி, கல்லூரி இணையதளத்தில் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட மறுமதிப்பீட்டு விண்ணப்பத்தை ஜூன் 18ம் தேதி மாலை 4 மணிக்குள் தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பி.ஏ., - பி.எஸ்.சி., - பி.காம்., - பி.காம் சி.ஏ., - பி.காம் ஐ.பி., - பி.பி.ஏ., ஆகிய இளநிலை பாடப்பிரிவுகள் விடைத்தாள் ஒன்றுக்கு 400 ரூபாயும், எம்.ஏ., - எம்.எஸ்.சி., - எம்.காம்., - எம்.காம் சி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 600 ரூபாயும், எம்.சி.ஏ. பாடப் பிரிவு விடைத்தாள் ஒன்றுக்கு 750 ரூபாயும் மற்றும் விண்ணப்பப் பதிவுக் கட்டணமாக 75 ரூபாயும் செலுத்தி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வு நெறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.