UPDATED : அக் 25, 2024 12:00 AM
ADDED : அக் 25, 2024 09:42 AM
பல்லடம்:
சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசிட் செய்தனர். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வரவேற்றார். தாளாளர் சுகந்தி முன்னிலை வகித்தார்.
டி.எஸ்.பி., சுரேஷ் பேசியதாவது:
தமிழகத்தில், சராசரியாக, ஒரு போலீஸ், 700 பேருக்கு பாதுகாப்பு தருகின்றனர். சவால் மிக்க பணி என்றாலும், இஷ்டப்பட்டு செய்யும்போது, பெரும் மகிழ்ச்சி, மன திருப்தி எங்களுக்கு கிடைக்கிறது. எவ்வளவோ போலீசார், காவல் துறையில் எவ்வளவோ தியாகங்கள் செய்துள்ளனர். மாணவர்களாகிய நீங்கள் தினசரி கட்டாயம் செய்தித்தாள் படிக்க வேண்டும். குற்றங்கள் நடந்தபின், குற்றவாளிகளை கைது செய்வதை காட்டிலும், குற்ற சம்பங்கள் நடைபெறாமல் கண்காணிப்பதுதான் போலீசாரின் முதன்மையான பணி.
இவ்வாறு பேசினார்.