Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதிப்பூட்டப்பட்ட பால்பொருட்கள் உற்பத்தி வருங்காலத்தில் அதிகரிக்கும்

மதிப்பூட்டப்பட்ட பால்பொருட்கள் உற்பத்தி வருங்காலத்தில் அதிகரிக்கும்

மதிப்பூட்டப்பட்ட பால்பொருட்கள் உற்பத்தி வருங்காலத்தில் அதிகரிக்கும்

மதிப்பூட்டப்பட்ட பால்பொருட்கள் உற்பத்தி வருங்காலத்தில் அதிகரிக்கும்

UPDATED : டிச 26, 2024 12:00 AMADDED : டிச 26, 2024 08:15 AM


Google News
Latest Tamil News
கோவை:
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் இணைந்து ( இ.டி.எப்.,),காலநிலை சீரமைந்த பால் தொழில் முனைவோர் திட்டத்தை துவக்கியுள்ளது.

உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கேற்ப,நிலைத்தபால் உற்பத்தி அமைப்பை உருவாக்க, நவீன தொழில்நுட்பம் மற்றும் சீரமைந்தபால் உற்பத்தி முறைகளை, இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற,தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் பேசுகையில், உலக பால் உற்பத்தியில், இந்தியாவின் பங்கு 25 சதவீதம். இந்தத் துறை ஆண்டுதோறும், 7.8 சதவீதம் வளர்ச்சியடைகிறது. மதிப்பூட்டப்பட்ட பால் உற்பத்தி பொருட்கள்எதிர்காலத்தில், 30-50 சதவீத அளவுக்கு வளர வாய்ப்பு உள்ளது, என்றார்.

குமரகுரு கல்வி நிறுவனத்தின் உதவி துணை தலைவர் சரவணன் சந்திரசேகரன், வியூகத் திட்டமிடல் மற்றும் மதிப்பாய்வு இயக்குனர் ரகுபதி, இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதிய தலைமை ஆலோசகர் ஹிஷாம் முண்டோல், குமரகுரு கல்வி நிறுவனங்கள் தாளாளர் பாலசுப்ரமணியம், கிசான்கனெக்டர் நிறுவனர் சாரங்கதர் ராமச்சந்திர நிர்மல் பங்கேற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us