UPDATED : அக் 31, 2024 12:00 AM
ADDED : அக் 31, 2024 11:20 AM
தீபாவளி பண்டிகைக்கு பள்ளிகளுக்கு நேற்று மதியம் துவங்கி, ஞாயிறு வரை மாநில அரசு விடுமுறை அறிவித்தது. இருப்பினும், திருப்பூரில் பல பள்ளிகள், 10, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை அறிவித்துள்ளன.
தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு அடுத்த நாள் மட்டும் விடுமுறை என அறிவித்துள்ள பல்வேறு தனியார் பள்ளிகள், நேற்று முழு நேரம் வகுப்பு நடத்தியதுடன், சனிக்கிழமையும் வகுப்புக்கு வருமாறு மாணவர்களிடம் கூறியுள்ளனர்.
பெற்றோர் சிலர் கூறுகையில், பொது தேர்வில் மாணவர்கள் மதிப்பெண் அள்ளுவதையும், 100 சதவீதம் பெறுவதையும் நோக்கமாக கொண்டு பள்ளிகள் செயல்படுகின்றன, என்றனர்.