யுபிஎஸ்சி தலைவராக பிரீத்தி சுதன் நியமனம்

UPDATED : ஜூலை 31, 2024 12:00 AM
ADDED : ஜூலை 31, 2024 05:33 PM
புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக பிரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த 20ம் தேதி அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை இன்று( ஜூலை31) ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைவராக பிரீத்தி சுதன் என்பவரை நியமித்து உள்ளார். இவர் தற்போது யுபிஎஸ்சி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்த உத்தரவு ஆக.,1 முதல் அமலுக்கு வருகிறது. 2025 ஏப்.,29 அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1983 ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், மத்திய சுகாதாரத்துறை செயலாளராகவும், பாதுகாப்புத் துறை இணை செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.