UPDATED : ஆக 23, 2024 12:00 AM
ADDED : ஆக 23, 2024 09:08 AM

புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் சிவகாமி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2024-25ம் ஆண்டில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பித்து, கலந்தாய்வின் போது இடம் கிடைக்காதவர்கள், குருசுக்குப்பம், என்.கே.சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
சமீபத்தில், 10ம் வகுப்பு துணைப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், இதுவரை பள்ளியில் சேராத மாணவ, மாணவியரும், பங்கு கொண்டு சேர்க்கை பெறலாம். இதற்கு கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. இந்த இறுதி வாய்ப்பை மாணவ, மாணவியர், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.