ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி
ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி
ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி
UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:25 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில்,ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார்.
மண்டல அலுவலர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். அதில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது. ஒட்டுப்பதிவு இயந்திரத்துடன், விவி - பேட் என்ற இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு செய்து காண்பித்து, பட்டனை அழுத்தினால் வேட்பாளருக்குத்தான் ஓட்டு பதிவாகிறது என அவர்களுக்கு நிரூபணம் செய்ய வேண்டும். பதிவான ஓட்டுகளை மறக்காமல் அழித்துவிட்டு கன்ட்ரோல் யூனிட்டுக்கு 'சீல்' வைக்க வேண்டும்.
ஓட்டுப்பதிவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, காலை, 6:00 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். எதிர்க்கப்பட்ட ஓட்டுகள், வயதில் இளையோர், பார்வையற்றோர், வாக்களிக்க விரும்பாதோர் ஓட்டு, நோட்டா, ஆய்வுக்குரிய ஓட்டுகள், வாக்களிப்பதை தடை செய்தல், பதிலி வாக்காளர் என, பல்வேறு வகையான ஓட்டுப்பதிவுகள் குறித்து விளக்கப்பட்டன.
ஓட்டுச்சாவடிகளில் ஆண், பெண் இருவரும் தனித்தனி வரிசையில் நின்று ஓட்டளிக்க அனுமதிக்கலாம். ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து விளக்கப்பட்டது.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
தபால் ஓட்டுப்பதிவு
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதற்காக, பயிற்சி முகாமில் அவர்களுக்கு பொள்ளாச்சி தொகுதியில், ஓட்டுப்போட விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. தபால் ஓட்டுப்பதிவுக்காக நீலகிரி, கோவை தொகுதி மற்றும் பிற மாவட்டங்கள் என மூன்று ஓட்டுப்பெட்டிகள் சீல் வைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
தேர்தல் பணியில் ஈடுபடுவோர், தபால் ஒட்டுகளை பெட்டியில் போட்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். பொள்ளாச்சிதொகுதிகளில் பணியாற்றும் அலுவலர்கள், கடந்த வாரம், 175 பேரும், தற்போது, 96 பேரும் ஒட்டுப்போட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் பணியாற்றும் அலுவலர்கள், தேர்தல் பணியாற்றும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டுப்பதிவு செய்வதற்கான உத்தரவும், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியை சேர்ந்தவர்கள், மற்ற தொகுதியில் பணியாற்ற உள்ள, 246 பேருக்கு தபால் ஓட்டு படிவங்களும் வழங்கப்பட்டதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.