Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமர்த் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும்!

சமர்த் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும்!

சமர்த் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும்!


UPDATED : மார் 08, 2026 01:49 PM

ADDED : மார் 08, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 08, 2026 01:49 PM ADDED : மார் 08, 2026 01:50 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:
“'சமர்த் - 2.0' திட்டத்தில், தையல், ஸ்பின்னிங், சாய ஆலைகள், எம்பிராய்டரிங், பிரின்டிங் உள்ளிட்ட தொழிற்பயிற்சியும், வேலைவாய்ப்பும் வழங்கப்படும்,” என, ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசினார்.

மத்திய அரசின் 'சமர்த்' திட்டம், தமிழகத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, பயிற்சி நிலையங்களுடன் இணைந்து, அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதற்காக, மானிய தொகை வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், பயிற்சி அளிக்கும் நிலையங்களுக்கு, மானிய தொகைக்கான காசோலையை வழங்கினர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சமர்த் கமிட்டி தலைவர் சக்திவேல் வரவேற்றார்.

திறம்பட பயிற்சி


திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் பேசுகையில், “புதிய நாடுகளுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ளது, இந்திய ஜவுளி ஏற்றுமதிக்கு வரும் காலம் பொற்காலமாக அமையும்.

'சமர்த் - 2.0' திட்டத்தால், தையல், ஸ்பின்னிங், சாய ஆலைகள், எம்பிராய்டரிங், பிரின்டிங் உள்ளிட்ட தொழிற் பயிற்சிகள் வழங்கி, வேலை வாய்ப்பும் வழங்கப்படும். பயிற்சி நிலையங்கள், போதுமான அளவு உபகரணங்களுடன் இயங்க வேண்டும். தொழிலாளருக்கு திறம்பட பயிற்சி அளிக்க வேண்டும்,” என்றார்.

75 சதவீதம்


சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், “சமர்த் - 2.0 திட்டம் திருப்பூரில் வெற்றி பெறும். கடந்த நான்கு ஆண்டுகளில், 'சமர்த்' திட்டத்தில், 19 ஆயிரத்து, 421 பேர் பயிற்சிபெற்றுனர்கள்; 28 பயிற்சி நிலையங்களுக்கு, 2.50 கோடி ரூபாய் அளவுக்கு மானிய உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.

'சமர்த்' திட்டத்தை சேவையாக கருதி, பயிற்சி பெற்றவர்களில், 75 சதவீத நபர்களையாவது, திருப்பூருக்கு தொழிலாளராக அனுப்ப வேண்டும்.

தற்போது, 10 லட்சம் தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். எதிர்காலத்தில், மேலும் ஐந்து லட்சம் தொழிலாளர் தேவைப்படுவர். பயிற்சி பெற்ற தொழிலாளர், திருப்பூரில் பாதுகாப்பான தங்குமிட வசதியுடன் பணியாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார்.

தங்குமிட வசதி


பொதுசெயலாளர் திருக்குமரன் பேசுகையில், “அமெரிக்காவுடனான வரி உயர்வு பிரச்னை முடிந்துள்ளது. ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, திருப்பூரில் வேலை வாய்ப்பு மென்மேலும் அதிகரிக்கும். பயிற்சி பெற்ற தொழிலாளருக்கு, பாதுகாப்பான தங்குமிட வசதியுடன் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,” என்றார்.

பெண் முன்னேற்றம்


இணை செயலாளர் குமார் துரைசாமி, சமர்த் திட்டம் வாயிலாக பயிற்சி பெற்றவர்களில், 90 சதவீதம் பேர் பெண்கள். அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் பங்களித்துள்ளது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us