பகுதி நேர பி.இ.,சேர்க்கை; விழிப்புணர்வு இல்லை

UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM
ADDED : ஜூன் 18, 2024 08:33 AM

கோவை:
பகுதி நேர நான்கு ஆண்டு பி.இ., பட்டப் படிப்புக்கு விண்ணப்பப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், போதிய விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. பகுதிநேர முதலாமாண்டு பி.இ. படிப்புகளுக்கு 2 ஆயிரத்துக்கும் மேல் காலியிடங்கள் உள்ள நிலையில், இதுவரை 225 பேர் மட்டுமே ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்துள்ளனர். விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக ஜூன் 27ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் பிற பதிவு, முக்கிய தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பித்தல் உள்ளிட்ட பிற சந்தேகங்கள் இருப்பின் 0422-2590080, 94869-77757 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.