Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணி நியமன ஆணை தாமதம் பன்னீர்செல்வம் கண்டனம்

பணி நியமன ஆணை தாமதம் பன்னீர்செல்வம் கண்டனம்

பணி நியமன ஆணை தாமதம் பன்னீர்செல்வம் கண்டனம்

பணி நியமன ஆணை தாமதம் பன்னீர்செல்வம் கண்டனம்

UPDATED : பிப் 25, 2025 12:00 AMADDED : பிப் 25, 2025 09:44 PM


Google News
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்காமல் இருப்பதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்த நிலையில், பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வேல்முருகன் என்பவர் இறந்துள்ளார்.

தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கால், அவர் உயிர் பறிபோனதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பணி நியமன ஆணைகளை வழங்க, அரசு காலதாமதம் செய்வது கண்டனத்துக்கு உரியது.

இந்த உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்று, அவரது மனைவிக்கு, தகுதிக்கு ஏற்ப உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும். இனியாவது, தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க, முதல்வர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us