சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற படூர் சிறுவன்

UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM
ADDED : ஜூன் 20, 2024 10:40 AM
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த படூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விமல்குமார்- - ஹேமாபிரீத்தா தம்பதியின் மகன் மித்தேஷ் செல்வம், 12; இப்பகுதி தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயில்கிறார்.
இவர், இணையதளங்களில் விளையாடும் கேம் செயலியை உருவாக்குவது குறித்து கற்று, லெமோனாய்ட்ஸ் என்ற விளையாட்டு செயலியை உருவாக்கியுள்ளார். இதற்காக, இச்சிறுவனின் சாதனையை அங்கீகரித்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.
அதேபோல், 2022ம் ஆண்டு, இவர் ஆன்லைன் லைவ் போட்டியில், க்யூபிக் கனசதுரத்தின் அனைத்து பக்கங்களையும், 1 நிமிடம் 4 வினாடிகளில் சமன் செய்தார். இச்சாதனையை, நோபல் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து, அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.