3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை

UPDATED : செப் 02, 2024 12:00 AM
ADDED : செப் 02, 2024 09:14 AM
சேலம்:
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்களில், மத்திய அரசு திட்ட நிதியில் நியமிக்கப்பட்டது,
உபரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்தது என பல பணியிடங்களுக்கு தற்காலிக சம்பள கொடுப்பாணை வழங்கப்பட்டு வருகிறது. உபரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்த வகையில், 3,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பள கொடுப்பாணை, ஜூலையுடன் முடிந்தது. ஆகஸ்ட் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் முதல், 6 மாதங்களுக்கு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், தற்காலிக கொடுப்பாணைகளில் ஊதியம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நிரந்தர கொடுப்பாணைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.