புதிய பாடங்களை துவக்க கல்லுாரிகளுக்கு வாய்ப்பு

UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 10:01 AM
சென்னை:
சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், அடுத்தாண்டுக்கு புதிய பாடத்திட்டத்தை துவக்க, நவம்பர், 4க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, சென்னை பல்கலை பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை பல்கலையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள், புதிய கலை அறிவியல் கல்லுாரிகளை துவக்கவோ, புதிதாக எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., பாடங்களை துவக்கவோ, புதிய படிப்புகளை, ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களை துவக்கவோ, வரும் நவம்பர், 4க்குள், www.unom.ac.in என்ற இணைதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இதற்கான கட்டணமாக, 2,360 ரூபாயுடன், 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யையும் சேர்த்து, பல்கலை பதிவாளர் மாற்றும் வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.