UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 08:34 PM
ராம்நகர்:
ராம்நகரில் தேர்தல் பணியை புறக்கணித்த கல்லுாரி விரிவுரையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
ஒவ்வொரு தேர்தலிலும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும். ராம்நகரில், பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட குடூர் அரசு பி.யு. கல்லுாரி விரிவுரையாளர் குமார் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
தபால் ஓட்டு சேகரிப்பு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட குமார், தன் பணியை சரியாக செய்யவில்லை என்றும்; தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டங்களுக்கும் வரவில்லை என்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் சென்றது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், குமாரை சஸ்பெண்ட் செய்து, தேர்தல் அதிகாரி அவினாஷ் மேனன் ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.