அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி ப்ரைம் சோதனை வெற்றி

UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 07:00 PM
புதுடில்லி:
அணு ஆயுதங்களை சுமந்து சென்று, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய, 'அக்னி ப்ரைம்' என்ற அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணை, ஒடிசாவில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்காக, அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு நம் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அக்னி 1 முதல் 5 வரையிலான ஏவுகணைகள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கி அழிக்கக்கூடிய அக்னி 5 ஏவுகணை கடந்த மாதம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 1,000 முதல் 2,000 கி.மீ., துாரம் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய, அக்னி ப்ரைம் என்ற அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணை நேற்று முன் தினம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் எஸ்.எப்.சி., எனப்படும், ஸ்ட்ராடெஜிக் போர்சஸ் கமாண்ட் இணைந்து இந்த சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட சென்சார்கள் வாயிலாக பெறப்பட்ட தரவுகளில் இருந்து ஏவுகணையின் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது. ராணுவ தலைமை தளபதி அனில் சவுஹான், டி.ஆர்.டி.ஓ., எஸ்.எப்.சி., மற்றும் ராணுவ மூத்த அதிகாரிகள் இதை பார்வையிட்டனர்.
இந்த ஏவுகணையின் உருவாக்கம் மற்றும் சோதனையில் உடன் இருந்த அனைவருக்கும், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். நம் ராணுவத்தின் ஆயுதப்படைக்கு இது மேலும் வலுசேர்க்கும் என அவர் கூறினார்.